×

மலேசியா சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவின் லாங்காவியில் இருந்து சென்ட்ரல் சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள சுவாங் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் பயணிகள், விமான ஊழியர்கள் என சுமார் 10 பேருடன் சிறு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க அனுமதி அளித்த போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் சென்ற 8 பேரும், சாலையில் சென்ற 2 பேரும் என மொத்தம் 10 பேர் பலியானார்கள். ஒரு கார் மற்றும் பைக் மீது விமானம் விழுந்ததால் 2 பேர் பலியானார்கள். விமானம் சாலையில் விழுந்து வெடித்து சிதறிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post மலேசியா சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Kuala Lumpur ,Langkawi ,Chuang Airport ,Central Selangor ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்